2013年2月25日星期一

பல கிறுக்கல்களில் சில -6

என்னையும் மறந்து ஒன்றை யோசிப்பேன் என்றானால் அது உன்னை மட்டுமே ஆகும். என்னை முழுமையாக ஆட்கொண்ட நீ, என் எழுதுகோலை என்ன செய்தாய்.? அதுவும் தன்னை மறந்து உன்னை பற்றியே எழுதுகிறது.

2013年2月2日星期六

பல கிறுக்கல்களில் சில - 5

உன் கை தொட்டு, கால் பிணங்கி, கன்னம் கிள்ளி,
என் மடி மீது உன் தலை சாய்த்து, 
நீ சிணுங்க  நான் காண்பது எப்பொழுது? 

உன் வெட்கத்தை நான் ரசிக்கையில்,
மேலும் வெட்கத்தில் குறுகி , என் மார்பில் 
நீ முகம் புதைப்பது எப்பொழுது?

உன் இதழ் பிரித்து மெலிதாய் சிரித்தாய், நான் உன்னைப் பிரிய முற்படுகையில்.
அந்த அழகிலிருந்து மீளமுடியாமல் பிரியா விடைபெற்றுச் சென்றேன்.