உன் கை தொட்டு, கால் பிணங்கி, கன்னம் கிள்ளி,
என் மடி மீது உன் தலை சாய்த்து,
நீ சிணுங்க நான் காண்பது எப்பொழுது?
உன் வெட்கத்தை நான் ரசிக்கையில்,
மேலும் வெட்கத்தில் குறுகி , என் மார்பில்
நீ முகம் புதைப்பது எப்பொழுது?
உன் இதழ் பிரித்து மெலிதாய் சிரித்தாய், நான் உன்னைப் பிரிய முற்படுகையில்.
அந்த அழகிலிருந்து மீளமுடியாமல் பிரியா விடைபெற்றுச் சென்றேன்.
没有评论:
发表评论