2013年3月4日星期一

பல கிறுக்கல்களில் சில - 10 மூதாட்டியும் முத்தமும்

                                                         மூதாட்டியும் முத்தமும் 

                                                 
                                                          பூக்களையும் இலைகளையும் உதிர்த்துவிட்டு வெண்பனியைச் சுமந்து நிற்கும் மரங்கள் சாலையின் இருபுறங்களையும் அலங்கரித்திருந்தன. பேருந்தினுள் கைக்கோர்த்தும் , உதடுகளை உரசியும் பயணித்துக் கொண்டிருக்கும் காதலர்கள்.  பொம்மை மாதிரியான கைக்குழந்தையைக் கொஞ்சிகொண்டிருக்கும் தாய். மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் பயணிக்கும் பள்ளிச் சிறுவர்கள். இறங்கும் முன்பு கைப்பையினுள் இருக்கும் கண்ணாடியை எடுத்து முகத்தை சரி செய்துகொள்ளும் அழகுப்பதுமைகள். யாரையும் பார்த்து எளிதில் சிரித்துவிடும் மத குருமார்கள், இவர்களுடன் ஒரு மூதாட்டி அவர் மகன்  மகனின் மனைவி, பேத்தி ஆகியோருடன் பயணித்துக் கொண்டிருந்தார். அழகுச்சிறுமி என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளைப் பார்த்துச் சிரித்தேன். வேகமாய் வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பியவள் தன் பாட்டியிடம் நான் சிரித்ததைச் சொன்னாள். இம்முறை மூதாட்டி என்னைப் பார்த்துச் சிரித்தாள். இதைப் பார்த்த சிறுமி தன் பாட்டியிடம் "அவரை உனக்குத் தெரியுமா? அவர் ஏன் கருப்பா இருக்கார்? நம்ம ஏன் வெள்ளையா இருக்கோம்? அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்யாசம்?" என்றவாறு விடாது வினவிக்கொண்டே வந்தாள். தர்மச்சங்கடமடைந்த மூதாட்டி "அவர் வேற ஊர்ல இருந்து வந்திருக்காரு அவங்க ஊர்ல எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்க" என்றாள். எனினும் சரியான பதில் கிடைக்காததால், அவளும் விடுவதாய் இல்லை. இம்முறை மூதாட்டி வருந்துவதாய்ச் செய்கை செய்து முறுவல் பூத்தார். "பரவாயில்லை" என நானும் செய்கை செய்தேன். சிறுமியிடம் கொஞ்சமும் எரிச்சலடையாத மூதாட்டி "பூனையில் எப்படி கருப்பு பூனை, வெள்ளை பூனை, மஞ்சள் பூனைனு நிறைய வகை உண்டோ அதே மாதிரிதான் மனிதர்களும். நிறம் மாறினாலும் அவங்களுக்கும் நமக்கும் எந்த வித்யாசமும் இல்லை" என்றாள். சமாதானம் அடைந்த சிறுமியிடம் மூதாட்டி தான் கையில் கொண்டிருந்த பூச்செண்டிலிருந்து ஒரு பூவை மட்டும் எடுத்து என்னிடம் கொடுக்கச் சொன்னாள். சிறுமியும் தயக்கமில்லாமல் கொண்டுவந்து கொடுத்தாள்.

                                           அந்நியக் குழந்தையின் பரிசும்,  மழலையின் கேள்விகளும், மூதாட்டியின் அன்பு பதில்களும், சிறுவர்களின் சிரிப்பும் விளையாட்டும், முத்தங்களோடு கூடிய காதல் பரிமாற்றங்களும், பனியின் வெள்ளை அழகும், பதுமைகளின் கொள்ளை அழகும்.....காலை பேருந்துப் பயணம் இதைவிட சிறப்பாக அமைந்துவிடமுடியாது. நான் இறங்கவேண்டிய இடத்தில் மூதாட்டியும் இறங்க ஆயத்தமானாள். வழியை மறைத்து நின்ற நான் அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கினேன். பாட்டி இறங்கப்போவதை அறிந்த பேத்தி, தன் அப்பாவிடம், "அப்பா, திரும்ப பாட்டி எப்போ வீட்டுக்கு வருவாங்க" என்று கேட்டு முகம் புதைத்து சோகமானாள்.

                                                பேருந்திலிருந்து இறங்கிய மூதாட்டி, ஒரு கையில் பேத்தி கொடுத்த பூச்செண்டும், மறுகையில் இனிப்பு மிட்டாய்களோடும் நின்று கொண்டிருந்தாள். கூனிய முதுகுடனும், குறுகிய தோளுடனும், சுருங்கிய தோலுடனும், தளர்ந்த கால்களுடனும், சாலையைக் கடக்க மிகவும் சிரமப்பட்டாள். வேகமாய் நகரும் இளைய தலைமுறையுடன் நானும் மிக வேகமாய் நகர்ந்தேன். என் கையில் வழக்கமாய் இல்லாத ஏதோ ஒன்று இருப்பது புரிந்தது. மூதாட்டி, சிறுமியிடம் எனக்காக கொடுத்து அனுப்பிய பூ. சட்டென என் கால்கள் நகர மறுத்தன. மிக வேகமாய் முன்னோக்கி நகர்ந்த இளையவர்களிடமிருந்து விலகி பின்னோக்கி நடந்தேன். மூதாட்டிக்கு அருகில் போய் என் கை நீட்டினேன். அதுவரையும் குனிந்தே நடந்து வந்த அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்து அன்பாய் சிரித்தார். சாலையைக் கடந்த பின் "எங்கே போக வேண்டும் அருகிலானால் நானும் வருகிறேன்" என்றேன். பிடிக்கப்பட்ட என் கை இன்னும் விடப்படவில்லை. "அருகில் தான்" என்றாள். அவளுடனேயே நடந்தேன். அதன் பின் என்னுடன் எதுவும் பேசவில்லை. கை பிடி மட்டும் இறுகியது.

                                               300 அடி தாண்டியிருப்போம். ஒரு கட்டிட வளாகம், மிகவும் அமைதியான, இறுக்கமடைந்த இடமாகத் தெரிந்தது. அங்கு இருந்த அனைவரும் இம்மூதாட்டியைப் போலவே, தளர்ந்த உடலும், முறிந்த மனமும் கொண்டவர்களாய்த் தெரிந்தார்கள். அந்த நிமிடம்தான் என் மனதுக்கு அந்த மூதாட்டி என் கையைப் பிடித்த விதம் பிடிபட்டது. ஆம், அது முதியோர் இல்லமே. சற்றே இறுக்கத்துடன் இருந்த என்னைப் பார்த்து சிரித்தாள். பின் தன் பேத்தி கொடுத்த மிட்டாயில் ஒன்றை என் கையில் திணித்தாள். என்னிடமோ அவள் கொடுத்த பூ மட்டுமே இருந்தது. அவளிடம் அதைக் கொடுத்தேன்.. சிரித்த அவள், என் முகம் தொட்டு, முத்தமிட்டு ஆசீர்வதித்தாள். சுருக்கங்கள் அவள் தோலில் மட்டுமே. கனத்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினேன். மிக வேகமாக ஐரோப்பிய கலாச்சாரத்துக்கு மாறி வரும் நாம், முதியோர் இல்ல கலாச்சாரத்தையும் இங்கிருந்துதான் கற்றுக்கொண்டிருப்போமோ? மிக அழகாகத் தெரிந்த ஐரோப்பியர்களைக் கண்டு அருவருக்கிறேன் இப்பொழுது. 

2013年3月3日星期日

பல கிறுக்கல்களில் சில - 9 பதின்பருவம் - "பிரிவினைப்பருவம்".


   பதின்பருவம் -  "பிரிவினைப்பருவம்".
                     
                            பதின்பருவம்: இடைவெளிகள் ஏற்படுத்தும் பருவம் என்றே சொல்லவேண்டும்.    பிரிவினைப் பருவம்  என்றும் சொல்லலாம். பள்ளிப்பேருந்தில் இருந்து  இறங்கியவுடன் கட்டியணைத்து, முத்தமிட்டு வரவேற்கும் அம்மா, ஏனோ, நாம் வளர்ந்து, சைக்கிளில் வந்திறங்கும்போது அந்த வரவேற்ப்பை கொடுப்பதில்லை. இந்த இடைவெளி, இந்த பருவத்தில், அணைத்து உருவுகளிலும் விழுகிறது. தாய்-மகன், தாய்-மகள், தந்தை-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி. உண்மை. நாமும் தொடாமலேயே அன்பையும் பாசத்தையும் பரிமாறக் கற்றுகொண்டோம். ஆயினும் மிகச் சமீபத்தில், இதையெல்லாம் தவரவிட்டுடோமே என என்னும் அளவுக்கு ஒரு சம்பவம்.:  
                            என் அயல் (ஆங்கிலக் குடியுரிமைப் பெற்ற இந்தியன்) நாட்டு நண்பன் ஒருவன் தன் பெற்றோர்களை வழியனுப்ப விமானநிலையம் போனான். நானும் துணைக்குசென்றேன். அவன் பெற்றோர்களை ஆரத்தழுவி, முத்தமிட்டு வழியனுப்பி வைத்தான். நான் அவர்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏனோ கண்கள் கலங்கியது. என்னைப்  பார்த்த  நண்பன் என்னிடம் பேசத் தொடங்கினான்.  
                           அவன்: Dude! You alright?
                            நான்:   Certainly. 
                           அவன்: Come on dude. You are not. You homesick?  
                            நான்:  I don't know. May be I am. Its just that I can't remember the last time I hugged or kissed my parents. I regret I missed all these moments.
                           அவன் : You don't have to. Coz its not your fault. Its the society. And you guys bother too much about the society.  
                     
                   அவன் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது. . "இதோ பாருடா! மீசை அரும்பியவனுக்கு பெற்றோர்களின் பாசத்தை!' என மற்றவர்கள் ஏளனம் செய்துவிடுவார்களோ என்ற எண்ணமும், கூச்ச  உணர்வும் நம்மை கொஞ்சம் தள்ளித்தான் வைத்துவிட்டன.
                           
                     ஒரு விடுமுறையில் என்னுடன் தொட்டுப்பிடித்து, கண்ணாமூச்சி, சமயங்களில் கிரிக்கெட்டும் விளையாடிய பக்கத்து வீட்டு அக்காக்களும்  எதிர் வீட்டு தங்கைகளும் அடுத்த விடுமுறையில் வீடினுள்ளயே இருந்தார்கள். (இருத்திவைக்கப்பட்டார்கள்). இவ்வளவு ஏன்?  என் கைக்கோர்த்து, தோலும், தோளும், உரசித் தோழமைப் பயின்ற தோழிகள் என ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்றனர். மூன்றாம் வகுப்பில் என்னுடன் ஒரே மோட்டார் சைக்கிளில், ஒரே இருக்கையில் (மூன்று நபர்களாக, வண்டி ஓட்டிய அண்ணனையும் சேர்த்து) பள்ளிக்கு வந்த என் தோழி, ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆட்டோவில் சென்றாள் (அனுப்பிவைக்கப்பட்டாள்).                                                

                               இப்படியே பிரிவுகள் வளர,  அந்த பிஞ்சு வயதிலேயே, எங்களுக்கு, ஆண்களும் பெண்களும் பழகுவது தவறென்ற தவறான விஷயத்தை மிகச்சரியாக எடுத்துரைத்தது யார்? பெற்றோர்களா? சினிமாவா? இல்லை ஐந்தாம் வகுப்பிலிருந்தே ஆண் மானாக்கரையும் பெண் மானாக்கரையும் தனித்தனியாக அமரச் செய்த பள்ளிக்கூடங்களா? பேருந்துகளிலும் ரயில்களிலும் "ஆண்கள்", "பெண்கள்" என இன்றளவும் எழுதும் அரசையா? யாரைச் சாடுவது?

                          கிராமத்துத் தோழிகளுடன் கண்ணாமூச்சி, பக்கத்து வீட்டுத் தோழிகளுடன் மணல் விளையாட்டு. தங்கைகளுடன் யானை விளையாட்டு, அக்காக்களின் உப்புமூட்டை, பள்ளித்தோழிகளிடம் இருந்து கிட்டும் இடைவெளி நேர குச்சி மிட்டாயும், எழந்தப்பழமும், நெல்லிக்காயும் எல்லாமும் ஒரேடியாக நின்று  போகும் இப்பருவம், எல்லாவற்றிற்கும் மேலாக முதல் தோழியாம் அன்னையின் மடி சாய்ந்து உறங்கும் பழக்கம் நின்று போகும் இப்பருவம், "பிரிவினைப்பருவம்".

பல கிறுக்கல்களில் சில - 8 மழலைப்பருவமும் முத்தமும்


 மழலைப்பருவமும் முத்தமும்
         ஏழு வயது. காலை ஆறு மணி. அவள் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, வாசல் தெளித்து, கோலம் போட்டு, முன் இரவு வைத்த பாத்திரங்களை தேய்த்து முடித்து, அப்பாவுக்கு காபி போட்டு குடுத்து, 7 மணியளவில் என் நெற்றியில் முத்தமிட்டு, என்னை எழுப்பி,  குளிக்க வைத்து, சீருடை அணிவித்து, உணவிட்டு, பின் காலணி அணிவித்து, நிமிர்ந்து என்னிடம் ஏதோ பேச நினைப்பாள், மிகச்சரியாக அந்நேரம் பள்ளிப்பேருந்து வந்திருக்கும். மீண்டும் என் கன்னத்தில் முத்தமிட்டு, பேருந்து படியேற்றி "பையன பாத்துக்கோங்க" என ஓட்டுநரிடம்  சொல்லி, விரைந்து சென்ற பேருந்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள் தாய். 

        அதே நாள், அதே நேரம், காலையில் எழுந்து சிகரட் பிடித்து, காபி குடித்து, நாம் எழும்பும் முன்பே மைதானம் போய் விளையாடி விட்டு, அவர் வீடு திரும்பும் நேரம், நாம்  சீருடை காலணி அணிந்து கொண்டிருப்போம் அல்லது பள்ளிப் பேருந்தில் ஏறியே இருப்போம். வெகு சில நாட்களில் அவர் சீக்கிரம் வந்துவிட்டு "கண்ணா ஸ்கூல்க்கு லேட் ஆகுதுல்ல சீக்கிரம் சாப்பிடு" என்பார். இது ஒரு வீட்டில் மட்டுமல்ல, அநேகமாக, தமிழகத்தில் பெருவாரியான வீடுகளில் நடப்பதுதான். அப்பாவிடம் சரியாக பேச முடியாதது தமிழக பிள்ளைகளின் சாபக்கேடு போலும். கடைசியாக அப்பாவிடம் பெற்ற முத்தம் மட்டும் ஏனோ நினைவிலேயே இல்லை. 

        பள்ளியில் இறங்கிய அந்த நிமிடம் என் மனதில் (இன்றளவும்) தோன்றுவதெல்லாம் ஒன்றுதான். "நாம் ஏன் இவ்வளவு பெரிய மூட்டையை சுமக்கிறோம்?" நானும் பேருந்து  நண்பர்களும்  சேர்ந்து பேசிக்கொண்டே வகுப்பறையில் போய் அமர்வோம். பள்ளி முடிந்து, வரிசையில் நின்று பேருந்து ஏறி  வீட்டுக்குச் சென்றதும், வாசலில் நின்று, நான் இறங்கியதும் என் தோளிலிருந்து பையை இறக்கி, கன்னத்தில் முத்தமிட்டு உள்ளே அலைதுசெல்வாள் என் அம்மா. பின்னர் நீராட்டி, பாராட்டி, சோறூட்டி, சீராட்டி உறங்க வைப்பாள் என்னை. உறங்கியபின்னும் என்னை முத்தமிட்ட பின்னே அவள் உறங்குவாள்.   

                               பள்ளியில் தோழர்களைவிடவும்  தோழிகள் அதிகம் இருந்த காலம் அது. சில வருடங்கள் கழிந்தன. வருடங்கள் கழிந்த மாதிரியே தோழிகளின் எண்ணிகையும் கழிந்தன. ஒரு நாள், வகுப்பின் விதிகளில் ஒன்றானது இது "ஆண் மாணவர்கள் பெண் மாணவர்களிடம் பேசக்கூடாது".  சிறு வயதிலேயே தவறான எண்ணங்களை புகுத்துவது இதுமாதிரியான வகுப்பறைதான்  போலும். 

     அம்மாவின் முதல் முத்தமும் முதல் ஸ்பரிசமும்  நமக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை, ஆனால் தோழியின் முதல் ஸ்பரிசமும் முத்தமும் நம் நினைவினில் இல்லாமல் இருக்க வாய்ப்பேயில்லை... நான் அப்படி பெற்ற முதல் முத்தம் என் பள்ளிப் பருவத்தோழியிடமிருந்து. ஏன் பெற்றேன்? எதற்காக பெற்றேன்? எப்போது பெற்றேன்? இதெல்லாம் சரியாக நினைவில் கொள்ளவில்லை எனினும், அவள் இதழ்கள் என் கன்னத்தில் பதிந்தது மட்டும் நினைவில் நிற்கிறது. அன்றிலிருந்து நானும் அவளும் மூன்று வெவ்வேறு பள்ளிகளுக்கு மாறியும் தொடர்ந்து தொடர்பிலேயே  இருந்தோம். எனக்கொரு நல்ல தோழியாக அவள் இன்றும் என்னுடன் பயனப்படுகிறாள்...                                                       
  

                                                                                                                                                                                                                                                                                                                                     அடுத்து பதின்பருவமும் முத்தமும் .

பல கிறுக்கல்களில் சில - 7 Off road: La Brasov

Off road: La Brasov.

 Caution: This is my personal travel experience. Persons who look for either technical, literary or medical writings, the red button with cross symbol at the top right corner is my suggestion. And the religious views on this work is my own personal view on religion and god.  Any spelling mistakes or grammatical errors, please pardon me.      

                                                                  Off road: La Brasov



            I wouldn't be writing this, if I had not had the company of Muthusaravanan to go there, Brasov, a town in Romania., with some beautiful Saxon villages on its outskirts, bordered by the Carpathian and Bucegi mountains. The beauty of villages and mountains, no more reasons we need to visit the place. Legends about The Dracula and the region Transylvania  are like cherries on top of the cake. Nothing could possibly be more interesting. I had this plan of going to Brasov since oct 2011, that is, soon after I landed in Romania. But I failed every time I planned. This time I was pretty much determined and I thought I would be going with a group this time, if not, drop the plan forever. Like always, this time too, many weren't able to join me. They all had their own explanations. I was about to bury my desires of  going to Brasov in a nice, Saxon designed, Romanian made coffin this time, but for one call to Muthu, he said "Yes we can go". We actually planned for just one day and later we changed it to a two days visit. And friends, this is just gonna be my travel experience, like what we saw, talked, what we felt when we visited certain sites. This is no literary work. So don't be expecting high level language and vocabularies. Trust me I am very bad in English. This is my first one in English, so, if this turns out be good and if I am satisfied as well, I may continue writing.

          Thinking of where I should start from, the trip was decided just 10 hrs prior to the starting time. In fact it all happened like this. I called Muthu at 10 pm or so, Thursday, 1.11.12 (our actual plan to Brasov was to go on Saturday 3.11.12 morning and come back the same night) and told him that no one else is coming and asked him even if its gonna be just the two of us, should we be carrying on. He said "why not". And added, "if only two of us, why not tomorrow (Friday, 2.11.12) itself?". I said I needed time and eventually, I, later, at (11 pm approx) confirmed. After all I was not ready to miss the chance to visit Brasov, the exotic beauty of Romania, as people say. And this tour or picnic or trip or whatever, reminds me of my college days trip to Ooty with Siddharth Raveendran, Sivakumar Reddy, Jai Ram and Selvakumaran, where we decided at 1 am about the trip and started right away at 2AM.. we drove all the way, Siddharth's car and reached Ooty by 7 PM next day. It was a good memorable trip. Hope they all remember the trip. Back to Romania., we decided to take the railroad to enjoy all the sceneries and luckily we had three options. The first train at 6 something AM, the second at 7 something AM and third one at 8.25AM. We opted the third one so that we can get adequate sleep. We decided to be at the train station at 7.45AM to get the tickets.

           Saturday 7.45AM GARA DE NORD Railway station: We met at the metro rail subway and we walked towards the tickets issuing office "CASA DE BILETE". Muthu was like "You buy the ticket as u speak better Romanian, more over You have the student card, so we might get a concession." I was in the counter now trying to speak Romanian to that lady officer "Buna Ziua. Vreu sa plecam la Brasov" and she gave me a 5 seconds stare (I swear I dint know what she was thinking) and then started speaking the typical Romanian accent English "Buna ziua. You wanted to go Brasov?" Now I understood the reason for that stare, my Romanian was too bad that she started speaking in her broken English. Muthu should have been very happy that she was speaking reasonable English. But for me, I thought come on lady I have spent almost 6 months of my precious time to speak this language and You cannot insult me like this in front of my friend. She turned the monitor that was on her desk towards us, it showed the list of trains to Brasov and the timings, and asked us which one we would want to travel on. We selected 8.25 AM. Now she told "I am errnn... I am worried that train is late for 15 minutes. You want to take the bilets still?" We thought its good that the train is delayed by 15 minutes for we can have our breakfast. "yes" we replied. We booked the return tickets also. "170 RON" she said bearing a grin. I thought I can give her my student ID so that we could get some concession. She rejected my ID card too saying that its past the expiry date. Insult No.2. We paid the full money and were in a restaurant a couple of minutes after,  having our breakfast. We came out of the restaurant at 8.10 and saw the departures board which showed our train was delayed by 50 minutes. Did she, the lady officer, mean fifteen minutes or fifty minutes? "To hell with her broken, Romanian English", we thought. But told ourselves it was our mistake too, to not to verify the delay period one more time before booking the tickets. So were we waiting for the delay time to decrease on the board. In a way I was comfortable with the delay, so that I could use one or two fags before we set off to leave. But the delay timer was not not only coming down but was exponentially going up from 50-75-100.. every 10-15 minutes interval. This time being frustrated, we din't hesitate to go to the officer and ask if we can change to some other train.

           
            We were at her cabin,explaining the situation. She reached for the phone and talked with someone for 2 minutes. We were told our train is gonna be delayed further more but she arranged an alternate for us and said "There is a train going to Timisoara via Brosov. If you want you can get in but the train leaves at 9.45 AM sharp from 6th lane. It was 9.43 already. We ran, as in India we do, dint mind anyone on the way. We saw the controller on the platform, got our tickets verified and he said "haideti, repede, repede", (come on, fast, fast) we ran towards the first door.. it was closed. We dint know we had to press a switch to open the door.. so stupid of us. Ran towards the second one, the guy at the door pressed the switch for us, the door opened and we got in thanking him "multumesc multi". The train was set to a slow start. We din't even know if we got in to the correct v(w)agon or correct cabin, all we wanted to do is get in the train and go to Brasov as soon as possible. We wondered if we can go and sit somewhere, we were a bit tired by then. Since this is not the train that we booked our tickets in we decided to stand and travel for the whole 2.40 hours. And only in the train we witnessed, for the first time, a passenger bribing the controller for not having tickets. I told Muthu "If only we had known this earlier, we would not have spent that much money on the tickets and still standing inside the train". I had drawn myself a picture of the train and the cabin, the previous night. Yes, I was dreaming with my eyes open thinking that I would be given a decent chair or a couch to rest while on board. My imagination of an European train was shattered. Trust me guys its no way better than Indian AC coaches, except for the automated doors and toilets and they take too much money for it. Muthu was taking pictures right from the starting point and that made our journey a lively one. He kept his camera ticking. By the time we reached Brasov, he had let the numbers cross beyond 490..




             Yes we reached at 12.20. We were discussing about how to look for an accommodation as we walked down the platform. We haven't even reached the station exit, there came a guy, Romanian, in his late 30s, introducing himself as Mr.Florin, a tour agent. He was standing at the entrance to get new clients, you all know this happens in a tourist spot. So he luckily got us and we too were fortunate to have him. He told us that he has his own apartment converted into a hostel like setup and if we want we can stay there and the price would be 100 RON. We thought there is nothing wrong to have a look at the place. He also told he has some other clients in there, in the other room, all from poland and they would be leaving shortly. And he had no more clients for the day so the entire place (a hall with sofas, computer with internet, a kitchen-fully furnished, and the bath, and a double bedroom with tv) will be ours for just 100 RON. It was not a bad deal we thought and agreed. Our accomodation was solved and now we were thinking about how to go to places around. We knew nothing about Brasov. We were totally alien. Now again he, Florin came with an offer. He said "If u want I can take you to the two important places, Bran (Dracula castle) and a fortress, here which is like 35kms from here and you pay me 100 RON for this again. We immediately accepted as we knew these two are "must see" places in Brasov and even if we had taken a taxi, 35 kms and 3 hours waiting charge, would have cost us more than that, moreover we had no idea about the bus routes. It was a rainy day too. So that was a better option for us. He assured us that when we are back to the apartment, the polish girls would be gone and the mess created by them would be cleaned up. So we din't wait. Got into his Renault MUV and moved onto gears.


             The place in the above photo is called the Old street or Old city. When we reached there, Florin started explaining everything like a tour guide to us. He slowly switched over from guiding to discussing. He started with ancient Romanian History, talked about communism, 1989 Revolution,  Caucescu, America and so on. It was something like half an hour non-stop History and civics class on a car in a foreign land by a foreign teacher for me. Muthu was happily taking a nap in the rear. I was just wondering how can a tour agent know all these world history, politics, etc. I asked him "what do u do Florin?". He said I was a history teacher, I finished Law School, was a football player, now I coach a football club in Brasov and I do tour management too. I was like "WTH". From then on I called him only Mr.Florin. But I had a doubt that might be trying to fool us around. When he stopped talking we were in the Bran castle. I couldn't wait to get in and see what is inside. We were waiting at the ticket kiosk and the lady said 30 RON per head. I gave her my student again and got insulted again. Mr.Florin came in and talked with the lady and got us the two tickets just for 20 RON. All we did in the Bran castle was take some pictures and we learnt from Mr.Florin that the original dracula castle is something else and is far away from Brasov. Nothing revealed about Dracula. All they have inside is the regular castle stuffs, Queen's bedrrom, dress, ornaments and jewels, some war equipments. And of course some photos and inscriptions. we were disappointed.














      The next thing we moved to is the Rasnov Fortress. Built by the Saxons. This one was also good but not something to be wondered at. Its a very old half ruined fortress. It looks majestic from outside but what's inside was disappointing.



           
     We went out after this had our dinner. Roamed around the city centre. Found some land marks for the next day. Went to the apartment. As he assured, the apartment was cleaned, was smelling good. most important thing, our things were all safe. Mr.Florin's image went up with me. Well this is all for the first day.

       The next day 9 AM we went outside with a plan to visit the Black church first. Well ahead of opening time we were there. we took some pictures and then when it was open  we had to buy the tickets. This time around I din't want to try giving my ID and get insulted. So I payed the whole amount. I was wondering why the name "Biserica Neagra" "the Black Church". seriously I dint have any idea till I came out of the church with a brochure. That place, in the name of god, is now used to increase the state's revenue. I remember telling Muthu "This is my first time ever inside a church". But now I reckon visiting St.Francis church in Goa once, when I was a kid. I apologize, Muthu. This is my second time ever inside a church. The church wasnt very appealing from outside. But I must admit, I was astonished with the way they have designed the interiors, decorations, it was awesome. But not allowing us to take photographs disappointed us. It was way beyond impressive. The name "Black church" was given because the entire church was on fire sometime back in the history (dont remember the year) and walls were all black. so this name. They renovated and now it functions as a museum. I had a thought after reading this from the brochure that i shared with Muthu, "God cant even save himself and his place after all from a fire, and still people believe in him that he'll save each and everyone from all the problems".









   After this we went to the cultural museum, nothing really interesting was there.They had all mud pots which they call historic, and they had historical trading bills, like receipts for Transylvania trading spices with India, silk with China, etc..They had the historic tax documents which was also interesting. The guide in there was interesting, she was very well obsessed with India such that instead of guiding us she was asking questions about India all the time. When I asked her for a picture, she said okay and then said "Dont show this to your girlfriend, she'll be jealous." Me: "I am still single. So don;t worry. What about u? Married or Boyfriends?" she said "No. Single". I told her "I may ask u for a dinner date soon." She was saying "Why not. I am ready to go with u." And to Muthu I was telling " why didn't we come here yesterday itself. today we are gonna leave the place."






 We had been to the White Tower  and Black Tower and the first Romanian School. And strada Sforii. They claim it be the world's second narrowest street. All that was Okay kind of a thing. Not so exciting!                                  

                                     We had funny moments too. It was too cold outside and rainnig too. I got my rhinitis  again. I was keeping on wiping my noseand Muthu with the camera was picturising me every time i did that.




                           And the most important thing I misplaced my sun glasses in Mr.Florin's car and when I called him, he said its with him and he would be giving it to me when I leave and he did. Now he commanded respect from me. And we were checking our camera memory cards, after boarding the train, the number has crossed 2500. Transferred every single photo to my hard disk and I am back home with good memories.

              I started writing this 12 past midnight (04-11-12) and dozed off at 4.15 AM. But thanks to my roommates who woke me up again at 4.30 and made me stay till 6 in the morning after which I lost interest in sleeping and from then i enjoyed continued writing till now.