2013年1月24日星期四

பல கிறுக்கல்களில் சில - 3.

                                                                    பிறப்பு - என் விதி!!! 


                  சமூக இணையதளத்தில் 60க்கும் மேற்பட்ட நண்பர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கிறேன். நிஜத்திலோ, தனிமைத் தோழன் மட்டுமே என்னை இங்கு தழுவிக்கொண்டிருக்கிறான். அவனுடன் சேர்ந்து எனது இதுவரை வாழ்க்கையை சற்று பின் நோக்கி பயணிக்கும் தருணத்தில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

                     பயணப்பட முற்படும்போதே எனக்குள் ஒரு கேள்வி தோன்றியது. "என் பிறந்த நாள் எனக்கு பிரத்யேகமானதா?" என்பதே அந்த கேள்வி. என் பிறந்தநாளை பிரத்யேகமானதாகவும், விஷேசமானதாகவும் கொண்டாட நான் இதுவரை என்ன செய்துள்ளேன்?

                         26 வருடங்கள், அநேகமாக, வாழ்க்கையின் மூன்றில் ஒரு பங்கு கழிந்தாகிவிட்டது. இவ்வளவு காலமும் நான் செய்த ஒரே சாதனை - எனக்கே எனக்காக, திட்டமிட்டுப்  போடப்பட்ட பாதையில் தடம் பிறழாமல்  பயணித்தது மட்டுமேயாகும். "கடமையை மிகச்சரியாக செய்து கொண்டிருக்கிறாய்" என என்னை நானே தோள் தட்டிக்கொடுத்துக் கொண்டாலும், நான் பயணிக்கும் பாதை நான் அமைத்துக் கொண்டதல்ல என எண்ணும்போது, என் பயணம் எனக்கு வெறும் கடமையாக மட்டுமே தெரிகிறது. நான் பயணப்படப் போகும் பாதையைத் தீர்மாணிக்கும் அதிகார இடத்தில் நானிருக்கவில்லையே என்ற ஆதங்கம் மட்டுமே மிதமிஞ்சியிருக்கிறது. அது வெறும் ஆதங்கம் மட்டுமே. வருத்தமல்ல. காலம் கடந்து வருத்தப்படுவது அர்த்தமற்றது. பாதை எதுவானாலும், ஓடுவது ஒன்றே விதியென்பதால் இன்றளவும் ஓடிக்கொண்டேயிருக்கிறேன், சற்றும் ஆர்வம் குறையாமல்.

                          விதியின்பால் அறவே நம்பிக்கையற்றவன் நான். எனினும், நான் கடந்து வந்த பாதையைப்  பார்க்கும்பொழுது, விதியை கொஞ்சம் நம்பத்தான் வேண்டியிருக்கிறது. மாபெரும் பந்தையப்  போட்டியில், இலட்சக்கணக்கான சக உயிரணுக்களை வெற்றி கண்டு, "நான்" பிறந்தது தற்செயலென நினைத்திருந்தேன்.. தவறு!!!!!!   பிறப்பு - என் விதி  போலும்!!!!.

                         

                    விதியை வெல்லலாம் என்பது உண்மையானால், அந்நாளுக்காக நான் காத்திருப்பேன்.!

                  என் பேராசையெல்லாம் ஒன்றுதான் --- " விதியை வெல்வதே என் விதியாக இருக்கட்டும் "!!..

                                                                               
                                                                                                  பிறந்தநாள் இரவன்று 
                                                                                                
                                                                                                 தனிமைத்தோழனுடன் 
                                                                                                                                                                                 
                                                                                                போ.ரவிசந்திர பிரகாஷ். 

                                                                                                                                                                           
                  

没有评论:

发表评论